சென்னையில் நடைபெற்ற “பகிர்ந்து உண் “மனிதநேய நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. Pro Trend நிறுவனம் மற்றும் தியாகி ஐயா அவர்களின் பேராதரவோடு RJ கிருத்திகா தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்வு, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் உதவி தேவைப்படும் 100 குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் நடத்தப்பட்டது.
இந்த சமூகப் பணிக்காக சுமார் ₹10 லட்சம் மதிப்பிலான உதவிகளை வழங்கி, நிகழ்வின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் இலங்கையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திரு. தியாகி அவர்கள். உணவுப் பொருட்கள், கல்வி உபகரணங்கள், குழந்தைகளுக்கான அத்தியாவசிய பொருட்கள், முதியோருக்கான உதவிப் பொருட்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும், குறவர் சமூகத்தைச் சேர்ந்த தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் நிகழ்வில் கலந்து கொண்டு பயனடைந்தனர். புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சிறப்பு நிதி உதவித் தொகைகள் மற்றும் வாழ்வாதார ஆதரவு வழங்கப்பட்டது. சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும் குடும்பங்களுக்கு இத்தகைய உதவிகள் நேரடியாக சென்றடைந்தது நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது.
நிகழ்வில் Crescent group Mariam Habeeb Ar Buhari,Etas cars Co founder Mr. Mohammed Azar, Health Umberla நிறுவனத்தின் Founder Dr. Joshua,and Social-activist Mr.Thahir Hussain உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வழங்கினர். சமூக ஆர்வலர்கள், இன்ஃப்ளூயன்சர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு மனிதநேய பணிக்கு தங்களது ஒத்துழைப்பை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்வு வெறும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வாக மட்டுமல்லாமல், சமூக அக்கறை, மனிதநேயம் மற்றும் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் ஒரு முன்னுதாரணமாகவும் அமைந்தது. நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைத்து நல உள்ளங்கள், தன்னார்வலர்கள், ஆதரவாளர்கள், விருந்தினர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு Pro.Trend மற்றும் RJ கிருத்திகா மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.





